'ஹலோ.. நூறா?'.. 'இங்க கொஞ்சம் வந்து, இந்த ஐட்டத்தை வாங்கித் தர்றீங்களா?'.. இளைஞர் கேட்ட 'வேறலெவல்' உதவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 26, 2019 04:42 PM

அவசர உதவி எண்ணான 100க்கு போன் செய்து, குடிப்பதற்கு மது வாங்கிக் கொண்டு வரச் சொன்ன இளைஞரது செயல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Man makes emergency call to police and asked them to get liquor

மத்திய பிரதேசத்தின் கோடர் பகுதியைச் சேர்ந்த உமா ஷங்கர் என்பவரின் மகன் சச்சின் என்கிற இளைஞர், அவசர உதவி எண்ணான 100க்கு போன் செய்துள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த 100 செயல் மைய அதிகாரிகளிடம் அவர், தனக்கு குடிப்பதற்கு மது வாங்கிக் கொண்டு வருமாறு கேட்டு அதிரவைத்தார்.

உடனே அவரை அணுகிய போலீஸார், நடந்ததை சச்சின் வாயிலாகவே கூற, அதனை வீடியோ ஆவணமாக பதிவு செய்துள்ளனர். அதில் பேசிய சச்சின்,, ‘எங்கள் ஊரில் இருக்கும் இந்த டாஸ்மாக் கடை என் தாத்தாவுடையது. நான் எவ்வளவோ முயன்று கேட்டும் அவர் தரவில்லை. என் தந்தையிடம் கூறியும் பலனில்லை. எனவே நான் வேறு கடையில் சிறிது மது அருந்துவிட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 100க்கு போன் செய்து மது வாங்கித்தரச் சொன்னேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  சமூக வலைதளங்களில் அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 

Tags : #MAN #LIQUOR #MADHYA PRADESH