‘கனமழையால் நடந்த சோகம்’... ‘வீடுகள் இடிந்து விழுந்து’... ‘இடிபாடுகளில் சிக்கி’... 'சிறுமி, பெண்கள் உள்பட 15 பேர் பலி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 02, 2019 09:25 AM

கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுமி, பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

15 died in house collapsed including girl child and women

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 4 வீடுகள் இடிந்ததில் இடிப்பாடுகளில் சிக்கி 4 பெண்கள், சிறுமி உட்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #COLLAPSE #DIED