‘வீட்டு முன்பு விளையாடியபோது’... ‘4 வயது சிறுவனுக்கு’... ‘வேளச்சேரி அருகே நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 26, 2019 01:19 PM

சென்னையில் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 year old boy died after falling into reservoir tank

வேளச்சேரி அருகே பள்ளிக்கரணை மல்லிகேஸ்வரன் நகரில் வசித்து வருபவர் பாரதிராஜ். இவரது மகன் கிருத்திக் ராஜ் (4), அங்குள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று மாலை, வீட்டு முன்பு உள்ள வாயில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு தரையோடு திறந்த நிலையில் இருந்த நீர்த்தேக்க தொட்டியினுள், சிறுவன் கிருத்திக் ராஜ் தவறி விழுந்துள்ளான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தொட்டிக்குள் விழுந்த கிருத்திக் ராஜை உடனடியாக மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெற்றோர் கதறித்துடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BOY #DIED