'காப்பகத்தில் தங்கி படித்து வந்த’... ‘10-ம் வகுப்பு மாணவிக்கு’... 'டியூசன் மாஸ்டரால் நேர்ந்த தொல்லை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 06, 2019 01:14 PM

குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த 10- வகுப்பு மாணவிக்கு, இளம் டியூசன் மாஸ்டர் ஒருவர், பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10th standard student abused by english young tuition master

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் கிராமத்தில், குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் குறிப்பிட்ட அளவில், அங்கேயே தங்கி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மாலை நேரங்களில், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் (33) என்பவர், ஆங்கில மொழிக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அங்கு படித்து வந்த 10- வகுப்பு மாணவியான 15 வயது சிறுமிக்கு, ஆங்கில டியூசன் மாஸ்டரான ஆனந்த், பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த காப்பகத்தின் உரிமையாளர் மீனா மற்றும் அருகிலிருந்தவர்கள் வந்து மாணவியை காப்பாற்றியுள்ளனர். பின்னர், இது தொடா்பாக காப்பகத்தின் உரிமையாளர், சிறுமியின் சாா்பில் ஓசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தார். அதன் பேரில், அங்கு வந்த மகளிா் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். உண்மை தெரிய வந்தததை அடுத்து, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், டியூசன் மாஸ்டரான ஆனந்தை கைது செய்தனர்.

Tags : #ABUSE #STUDENT #FEMALE #MASTER