‘பிறந்தநாள் பார்ட்டி’! ‘நம்பி போன 11ம் வகுப்பு மாணவி’.. ‘நண்பர்கள் செய்த கொடுமை’.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 30, 2019 09:38 PM

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore 11th std schoolgirl sexually abused by her friends

கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பூங்காவிற்கு கடந்த 26ம் தேதி இரவு 11ம் வகுப்பு மாணவி சக நண்பர்களுடன் சென்றுள்ளார். அன்று மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகிய நான்கு பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முதற்கட்டமாக இந்த நான்கு பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்தநாள் பார்ட்டி என அழைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #POLICE #COIMBATORE #FRIENDS