‘சல்யூட் தலைவா’!.. ‘கிணற்றில் மிதந்த விஷப்பாம்பு’.. மயிலை மீட்க உயிரை பணயம் வச்ச இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 02, 2019 01:11 PM

கிணற்றுக்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Man climbs down snake infested well to save drowning peacock

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமத்தில் மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணற்றுக்குள் அதிக தண்ணீர் இருந்ததால் வெளியே வர முடியால் உயிருக்கு போராடியுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மயிலை மீட்க முடிவெடுத்துள்ளனர். இதனால் நாலாபுறமும் கயிறு கட்டி இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

அப்போது கிணற்றில் பாம்பு ஒன்று மிதந்து சென்றுள்ளது. ஆனாலும் தனது உயிரை பணயம் வைத்து அந்த இளைஞர் கிணற்றுக்குள் இறங்கினார். உடனே சுவர் ஓரமாக ஒதுங்கி இருந்த மயிலை மீட்டு, மேலே உள்ளவர்களிடம் அதை தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் கயிறை மேலே இழுத்துள்ளனர். பின்னர் பத்திரமாக மயில் மேலே கொண்டுவரப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இளைஞர்களின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #TRICHY #WELL #PEACOCK #SNAKE #RESCUE #TAMILNADU #VIRLVIDEO