தாறுமாறாக ஓடிய ‘வேன்’.. நொடியில் ‘டோல் பூத்தை’ பெயர்த்து.. ‘அடுத்தடுத்து’ வாகனங்கள் மீது மோதி கோர விபத்து.. ‘பதற வைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 01, 2019 09:24 PM

கிருஷ்ணகிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் ஒன்று தாறுமாறாக ஓடி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Video 2 Died In Van Bike Accident In Krishnagiri Toll Booth

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது அருகிலிருந்த சுங்கச் சாவடி பூத் மீது மோதி, பூத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற வேன் அந்த வழியாக சென்ற 2 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் சுங்கச்சாவடி பூத்தில் இருந்த கவிதா என்ற பெண் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சரக்கு வேன் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். இந்த விபத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #VIDEO #KRISHNAGIRI #VAN #TOLLBOOTH #BIKE