‘ஆட்டநாயகன்’ விருது பற்றி ட்வீட் போட்ட மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ஜடேஜா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 27, 2020 04:21 PM

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது தொடர்பாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறிய கருத்துக்கு ஜடேஜா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ravindra Jadeja takes a dig at Sanjay Manjrekar on Twitter

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், ‘இந்த போட்டியில் பவுலருக்குதான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த ஜடேஜா மஞ்சரேக்கரை சீண்டும் விதமாக, ‘அந்த பவுலரின் பெயர் என்ன? ப்ளீஸ் ப்ளீஸ் குறிப்பிடுங்கள்’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மஞ்ரேக்கர், ‘ஹா..ஹா.. உங்களுக்கு அல்லது பும்ராவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் (பும்ரா) 3,10,18,20-வது ஓவர்களில் ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார்’ என பதிலளித்திருந்தார். இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜடேஜா 18 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAVINDRA JADEJA #CRICKET #BCCI #NZVIND #SANJAYMANJREKAR