'திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்'... 'கோவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 21, 2020 06:41 PM

16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

man sentenced to lifetime imprisonment for abusing minor girl

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ளது, அருகம்பாளையம் எனும் கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பம், தோட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தது. அந்த குடும்பத்தில் உள்ள 16 வயது நிரம்பிய ஒரு சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இதற்கிடையே, கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், அருகம்பாளையத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும், சதீஸ்குமார் அந்தச் சிறுமியிடம், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி, சதீஸ்குமார் அந்தச் சிறுமியை கடத்திக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமி தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பை கோவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : #SEXUALABUSE #COIMBATORE #MINOR