‘+2 ஸ்டூடண்ட்’!.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 08, 2020 01:30 PM

பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த சென்னை இன்ஜினீயர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Chennai software engineer\'s statement about child abuse case

சென்னையில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து 2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் சாய் என்கிற ராஜா சிவசுந்தரை (28) போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர், விருதுநகர் மாவட்டம் பல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பி.டெக் படித்துள்ள சாய் வேலை தேடி சென்னை வந்துள்ளார்.

அப்போது நிரந்தரமாக வேலை ஏதும் கிடைக்காததால் ரிச்சி தெருவில் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் திருமுல்லைவாயல், தாம்பரம், மடிப்பாக்கம், சேலையூர் ஆகிய இடங்களில் நெட் சென்டர் தொடங்கி, அங்கு வரும் பெண்களிடம் நெருக்கமாக பழகியுள்ளார். அப்போது பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலம் வாங்கியுள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

மேலும் சந்துரு என்ற பெயரில் சமூக வலைதளத்தில் போலீயான அக்கவுண்டைத் தொடங்கி, அதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் பேசிவந்துள்ளார். அவர்களிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி சினிமா, பார்க் என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பணம் பறிக்க முயன்று போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்த சாய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது என்னை ‘ப்ளஸ் டூ ஸ்டூடன்ட்’ என மாணவியிடம் கூறினேன். சிறுமி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை காண்பித்து 2 லட்சம் கேட்டு மிரட்டினேன்.

சிறுமியின் பெற்றோர் பணம் தருவதாக கூறியதும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டேன். அப்போது சிறுமியின் தந்தையிடம் செல்போனில் பேசினேன். செல்போன் சிக்னல் மூலம் என் இருப்பிடத்தை காட்டாத வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். போலீஸில் சிக்காமல் இருக்க பணம் வாங்கும் இடத்தை மூன்று முறை மாற்றினேன். ஆனாலும் போலீசார் என்னை பிடித்துவிட்டனர். என் மனைவிக்கு கூட தெரியாத என் தனிப்பட்ட வாழ்க்கை சிறுமியால் வெளியில் தெரிந்துவிட்டது என சாய் தெரிவித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவரிடமிருந்த 3 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் லேப்டாப்பை சாய் திறந்து காண்பித்துள்ளார். அதில் பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கைதான இன்ஜினீயர் சாய்க்கு திருமணமாகி குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

News Credits: Vikatan

Tags : #SEXUALABUSE #POLICE #CHENNAI