'பஜ்ஜி' சரியில்லை.. டெலிவரி பாய்க்கு 'தலையில்' வெட்டு.. சென்னையில் பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 27, 2019 10:52 AM

பஜ்ஜி சரியில்லை என கூறிய டெலிவரி பாயை கடை ஊழியர் கத்தியில் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth attacked delivery boy in Chennai, police investigate

சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமணி. இவர் அதே பகுதியில் உள்ள எலெட்ரிக் கடை ஒன்றில் 13 வருடங்களாக டெலிவரி பாய் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் ஞானமணி அவரது நண்பன் சீனிவாசனுடன் சவுகார்பேட்டையில் உள்ள பஜ்ஜி கடைக்கு பஜ்ஜி சாப்பிட சென்றுள்ளார். பஜ்ஜியை வாங்கி சாப்பிட்ட ஞானமணி பஜ்ஜி நன்றாக இல்லை என கூறி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து கடையில் வேலை செய்துவரும் அருண் என்ற வடமாநில ஊழியருக்கும், ஞானமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஞானமணி அருணை ஓங்கி அறைய, பதிலுக்கு அருண் தன்னுடைய கையில் வைத்திருந்த கத்தியால் ஞானமணியின் தலையில் வெட்டி விட்டார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட நின்ற ஞானமணியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அருணை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். பஜ்ஜி கடையின் அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை வைத்து போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.