தொடர் நஷ்டம்... அடிச்சது செம 'லக்'.. இனிமே 'நல்ல' காலம் தான்.. மகிழ்ச்சியில் 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்By Manjula | Nov 27, 2019 01:08 PM
தொடர் நஷ்டம் காரணமாக தொடர்ந்து வேலையில்லா நாட்களை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்து வந்தது. அந்த நாட்களில் சம்பளமில்லாத காரணத்தால் ஊழியர்களும் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டனர்.
மேலும் கடந்த 1 வருடமாக விற்பனையிலும் அசோக் லேலண்ட் நிறுவனம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் மற்ற நிறுவனங்கள் போல இதிலும் ஆட்குறைப்பு நடக்குமோ? என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்தநிலையில் அந்த நிறுவனத்திற்கு தற்போது மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
ஆமாம். தமிழ்நாடு அரசு பேருந்து கார்ப்பரேஷனுக்காக 1750 பேருந்துகள் தயாரிப்பதற்கான ஆர்டர் தமிழ்நாடு அரசிடம் இருந்து கிடைத்துள்ளது. தமிழக அரசிடம் இருந்து ஆர்டர் பெற்ற செய்தியை, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மீடியம் மற்றும் கண ரக வணிக வாகன பிரிவின் தலைவர் சஞ்ஜய் சரஸ்வத் உறுதி செய்து இருக்கிறார்.
இந்த செய்தி வெளியானவுடன் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.2% ஏற்றம் கண்டு தற்போது, 82.5 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதனால் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.