சென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு..! மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 19, 2019 06:58 PM

சென்னை விமான நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Car fire accident opposite Chennai airport bridge

சேலத்தில் இருந்து சென்னைக்கு நான்கு பேர் காரில் வந்துள்ளனர். கார் சென்னை விமான நிலைய மேம்பாலத்தின் மீது வந்துகொண்டிருந்தபோது காரின் முன்னால் இருந்து புகை வந்துள்ளது. இதனால் 4 பேரும் உடனே காரைவிட்டு கீழே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்து கார் பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலைய மேம்பாலத்தில் கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.