'குழந்தையுடன் விளையாட போன தாய்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 20, 2019 08:52 AM

குழந்தையை விளையாட கூட்டி சென்ற தாயை, சாலையில் வேகமாக வந்த கார் மோதிய சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

Speeding Car Hits Young Woman in Coimbatore, CCTV Footage Released

அவினாசி அடுத்த சூளை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவர் கடந்த 17ம் தேதி தனது குழந்தையுடன் விளையாடுவதற்காக வீட்டருகே இருந்த பூங்காவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். . சாலையின் ஓரமாக நடந்து சென்ற நந்தினியை பின்புறமாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் நந்தினி தூக்கி எறியப்பட்டார். இதையடுத்து நந்தினிக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கார் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நந்தினி சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த நந்தினிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தினியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. காண்போரை பதைபதைக்க செய்யும் வகையில் அந்த காட்சிகள் அமைந்துள்ளன. விபத்து தொடர்பாக நந்தினியின் கணவர் மகேஷ் அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #CCTV #COIMBATORE #SPEEDING CAR