'சென்னை மக்களே'...'லாரில வீட்டுக்கு தண்ணீர் வாங்குறீங்களா'?...'குடிநீர் வாரியத்தின்' முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 18, 2019 01:56 PM

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் வசிப்பவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர் லாரிகள். தற்போது  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. அதுகுறித்த விவரத்தையும் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது.

Lorry water price increased in chennai says Chennai Metro Water

லாரியின் மூலம் வழங்கப்படும் 9000 லிட்டர் தண்ணீருக்கு ரூ. 700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 735 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 435 லிருந்து 499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வணிகரீதியாக வாங்கப்படும் தண்ணீர் லாரிக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 3 ஆயிரம் லிட்டரின் விலை 500 ஆகவும், 6 ஆயிரம் லிட்டரின் விலை ரூ. 735 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 9 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1,050 ஆகவும், 12 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1400 ஆக உயர்த்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : #CHENNAI #WATER TANKER SUPPLY #CHENNAI METRO WATER