‘இன்று முதல் 20ஆம் தேதி வரை’.. ‘தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 17, 2019 05:56 PM

இன்று முதல் 20ஆம் தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டிலிருந்து புறப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் காலை மற்றும் மாலை வேளைகளில் தாமதமாக புறப்படும், குறிப்பிட்ட சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Chengalpattu Tambaram Electric Trains partially cancelled

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “17, 18, 19 ஆகிய தேதிகளில் கடற்கரையில் இருந்து காலை 3.55க்கு புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையிலும், 4.55க்கு புறப்படும் ரயில் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையிலும், 4.35க்கு புறப்படும் ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. 17, 18 மற்றும் 19ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்து காலை 3.55க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.50க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையிலும், 4.35 க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும், 6.40க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது.

20ஆம் தேதி கடற்கரையில் இருந்து 3.55க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு - காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.35க்கு புறப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலும் ரத்து செய்யப்படுகிறது. இதைப்போன்று செங்கல்பட்டில் இருந்து 3.55க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும், 4.50க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையிலும், 6.40க்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது” எனக்  கூறப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ELECTRIC #TRAIN #CHENGALPATTU #TAMBARAM #CANCELLED #DELAY #DETAILS #BEACH #KATTANKULATHUR #GUDUVANCHERI