‘அம்மா, அப்பா இறந்துட்டாங்க’.. ‘அக்காவ பாத்துக்க யாரும் இல்ல’.. 15 வயது தம்பி எடுத்த கண்ணீர் முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 29, 2020 05:18 PM

தாய், தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், மாற்றுத்திறனாளி அக்காவுக்காக தம்பி தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Brother stopped study for his handicapped sister in Mysore

மைசூர் மாவட்டம் ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு அனுஷா (17) என்ற மகளும், ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளைவளர்ச்சி குன்றியவர். ஆகாஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், குமாரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் இரு பிள்ளைகளும் யாரும் இல்லாமல் ஆதரவற்று நின்றுள்ளனர்.

இந்த நிலையில் தான் பள்ளிக்கு சென்றால் மாற்றுத்திறனாளி அக்காவை கவனிக்க முடியாது என கருதிய ஆகாஷ் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இதுகுறித்து அப்பகுதி தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தெரியவந்துள்ளது. உடனே ஆலனஹள்ளி கிராமத்துக்கு சென்ற தாசில்தார், சிறுவனிடம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தனது தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதாகவும், மூளைவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தனது அக்காவை கவனிக்க ஆள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்தியதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாசில்தார், மூளைவளர்ச்சி குன்றிய அனுஷாவை பாராமரிக்க மைசூரில் உள்ள கருணாலயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கேத்தனஹள்ளியில் உள்ள விடுதியில் ஆகாஷ் தங்கி படிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஆகாஷ் மற்றும் அனுஷா ஆகிய இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என தாசில்தார் மஞ்சுநாத் உறுதியளித்துள்ளார்.

Tags : #BROTHERSISTER #MYSORE