'திருப்பூர் அருகே பயங்கரம்...' ‘கண்ணிமைக்கும் நேரத்தில்...’ ‘அதிவேகத்தில் வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதிய பஸ்...’ 20 பேர் பலியான கோர விபத்து...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 20, 2020 09:06 AM

கோவை சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், கன்டெய்னர் லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி தற்போதைய நிலவரப்படி 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kerala bus tamilnadu lorry met accident 20 people died in spot

நேற்றிரவு கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றுள்ளது. அதே பாதையில் பெங்களூரிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த  கேரள மாநில அரசு சொகுசு பஸ் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

தீடீரென எதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியும், அரசு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி பேருந்து நசுங்கியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கோரசம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி பேருந்து ஓட்டுநர் உட்பட  பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை குழு காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி வழங்கியும், இறந்தவர்களின் உடல்களை மீட்டும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும் கண்டெய்னர் லாரியில் அதிக பளு உடைய டைல்ஸ் கற்கள் இருப்பதால் பயணிகளை மீட்பது சற்று கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேலும் சில மீட்பு குழுவை வரவழைத்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சுற்றுலா பயணிகள் பேருந்து சென்று கொண்டு இருந்தது.  இந்த பேருந்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பயணம் செய்த நேபாள நாட்டு சுற்றுலா பயணிகள் 5  பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  மேலும் 26 பேர் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : #ACCIDENT