வேண்டாத வேலை பார்த்த மருமகன்.. அவமானப்பட்ட மாமனார்.. கோபத்தில் விபரீத முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்பாக்கம் : இளைஞர் ஒருவர் தனியாக இருந்த வீட்டில், திடீரென புகை வர ஆரம்பித்த நிலையில், கதவைத் திறந்து பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மக்புல். இவருக்கும், கல்பாக்கத்தை அடுத்த நரசங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்தி என்ற இளம்பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நிஷாந்தி மற்றும் மகாபுல் ஆகிய இருவரின் பழக்கம், நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில மாதத்துக்கு முன்பு, நிஷாந்தியை கர்நாடகாவிற்கு அழைத்துச் சென்ற மக்புல், அங்கு திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மாமனார் - மருமகன்
இதனிடையே, நிஷாந்தியின் தந்தையான ராஜேந்திரன், தனது மகள் மற்றும் மருமகனை, கல்பாக்கத்திற்கு வரும் படி அழைத்துள்ளார். ராஜேந்திரன், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தனது மகள் மற்றும் மருமகனை, தனக்கு ஒதுக்கப்பட்ட ஊழியர் குடியிருப்பில் தங்க வைத்துள்ளார்.
திருட்டுத் தொழில்
இந்நிலையில் தான், கர்நாடகாவில் இருந்து வந்த மக்புல், வேலைக்கு எதுவும் செல்லாமல் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் பெயரில், ராஜேந்திரன் அவருக்காக சில இடங்களில், வேலையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஆனால், அங்கு எல்லாம் சரிவர வேலைக்கு செல்லாமல் மக்புல் இருந்து வந்துள்ளார். இதனால், அவருக்கு அறிவுரையையும் ராஜேந்திரன் வழங்கியுள்ளார். ஆனால், அது எதையும் மக்புல் கேட்டுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
உடல்நிலை பாதிப்பு
இதனிடையே, ராஜேந்திரனின் மனைவி இந்திராவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக, கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை, மகள் நிஷாந்தி, அருகே இருந்து கவனித்து வந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி
தனியாக இருந்த மக்புல், நரசங்குப்பம் பகுதியில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து, நேற்று முன்தினம், மக்புல் தங்கியிருந்த வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தலை உள்ளிட்ட சில பகுதிகளில் ரத்த காயங்களுடன் இருந்த மக்புல், எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட மக்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்கள்
தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த சதுரங்கபட்டினம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது, மாமனார் ராஜேந்திரன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரத்தக் காயங்களுடன் மக்புல் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் கருதினர். பின்னர், ராஜேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
மாமனார் அறிவுரை
இது பற்றி ராஜேந்திரன் கூறுகையில், 'கர்நாடகாவில் வாழ்ந்து வந்த எனது மகள், மிகவும் வறுமையில் வாடியுள்ளார். இதனால், கல்பாக்கத்திற்கு அழைத்து, எனக்கு வழங்கப்பட்ட அணுமின் நிலைய குடியிருப்பில் தங்க வைத்தேன். ஆனால், அப்படி இருந்தும் மக்புல் வேலைக்கு எதுவும் செல்லாமல், திருட ஆரம்பித்துள்ளார். இது பற்றி, பலரும் என்னிடம் கூறிய போது, எனக்கு அவமானமாக இருந்தது. தொடர்ந்து, நான் மக்புலுக்கு அறிவுரை கூறினேன். ஆனால், அவர் அதை கேட்கவில்லை.
தீர்த்துக் கட்ட முடிவு
இது எனக்கு அதிகம் மன உளைச்சலைத் தந்தது. நேற்று முன்தினம், நரசங்குப்பத்தில் உள்ள எனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கிய மக்புலை பார்க்கச் சென்றேன். அப்போது அவரை, சுத்தியலால் அடித்து, அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துத் தீர்த்துக் காட்டினேன்' என ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவமானம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, மருமகனை மாமனாரே தீர்த்துக் கட்டிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.