"ஐபிஎல் நெருங்குனா போதும்.. உடனே ரிவீட் அடிக்க 'START' பண்ணிடுவாங்க.." சுனில் கவாஸ்கர் கருத்தால் எழுந்த 'பரபரப்பு'
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக, மும்பையைச் சுற்றியுள்ள 2 அல்லது 3 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
"நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு
மேலும், இந்த முறை நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய அணிகளுடன், மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது.
முன்னதாக, கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், ஐபிஎல் மெகா ஏலம், பெங்களூரில் வைத்து நடைபெற்றிருந்தது.
ஐபிஎல் மெகா ஏலம்
இதில், அனைத்து அணிகளும், தங்கள் திட்டம் போட்டு வைத்திருந்த வீரர்களை, கடும் போட்டிக்கு பிறகு, அணியில் சொந்தமாக்கிக் கொண்டனர். பல வீரர்களும், புதிய அணிகளுக்காக களமிறங்கவுள்ள நிலையில், பல இளம் வீரர்களும், எதிர்பார்த்ததை விட, அதிக தொகைக்கு ஏலம் போய், ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்
அனைத்து அணிகளின் வீரர்கள் யார் யார் என்பது தெரிந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி 20 தொடரும், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாழ்க்கையை மாற்றும் ஐபிஎல்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், ஐபிஎல் போட்டி குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 'ஐபிஎல் ஏலம் என்பது, அனைத்து வீரர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய ஒரு தருணமாகும். அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஐபிஎல் ஏலத்தால், அவர்களின் குடும்பத்தினரும் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஐபிஎல் தான் முக்கியம்
ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அந்த வீரர்கள் தங்களின் நாட்டுக்காக, சர்வதேச போட்டிகளில் களமிறங்கும் போது, மிகவும் கடினமான முயற்சிகளை எடுக்காமல் இருப்பார்கள். ஒரு வேளை, காயம் ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனால், ஐபிஎல் ஒப்பந்தம் ரத்து ஆகவும் வாய்ப்புள்ளது.
வீரர்களுக்கு பயம்
இதனால், ஐபிஎல் நெருங்கும் போது, சர்வதேச போட்டியில் ஆடும் வீரர்கள், டைவிங் செய்வது, ஸ்லைடிங் செய்வது, மற்றும் கடினமான முறையில் பந்துகளை வீசுவது என்பதை அதிகம் முயற்சி செய்ய மாட்டார்கள். அப்படி ஏதாவது செய்து, உடலில் சேதம் ஏற்பட்டால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக நேரிடும் என்ற பயத்தில் அப்படிப்பட்ட செயலில் ஈடுபட மாட்டார்கள்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள், டி 20 தொடரில் மோதி வருகிறது.
ரசிகர்கள் கருத்து
இதில், நேற்று நடைபெற்ற போட்டியில், இரு அணி வீரர்களும் அதிகம் ரிஸ்க் எடுத்து, மிகவும் சிறப்பான பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தனர். அப்படி இருக்கும் போது, ஐபிஎல் போட்டிகளை விட, சர்வதேச போட்டி மீது அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில், சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
"கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்'ல.." ஒரே நேரத்தில் கடுப்பான ரோஹித், சாஹல்.. காரணம் என்ன?