RRR Others USA

UNCLE-ன்னு கூப்டது ஒரு குத்தமாய்யா..! ரிப்பேரான ‘பேட்மிண்டன்’ ராக்கெட்டை சரி செய்ய போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 27, 2021 08:43 PM

Uncle என அழைத்த இளம்பெண்ணை கடைக்காரர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shopkeeper attacked 18-year-old girl for calling him uncle

உத்தரகாண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் மோகித் குமார் என்பவர் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதில் சில ஸ்ட்ரிங்  விடுபட்டு இருந்துள்ளது.

Shopkeeper attacked 18-year-old girl for calling him uncle

இதனால் பேட்மிண்டன் ராக்கெட்டை சரி செய்வதற்காக மீண்டும் அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடைக்காரர் மோகித் குமாரை ‘Uncle’ என அப்பெண் அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகித் குமார், அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

Shopkeeper attacked 18-year-old girl for calling him uncle

இதில் படுகாயம் அடைந்த அந்த இளம்பெண், தற்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 323, 354 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் மோகித் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Uncle என அழைத்தற்காக இளம் பெண்ணை கடைக்காரர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SHOPKEEPER #UNCLE #ATTACKED #WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shopkeeper attacked 18-year-old girl for calling him uncle | India News.