அஜித் ஃபோட்டோவுக்கு பிரபல நடிகரின் வைரல் கமெண்ட்..! "எங்களுக்கு முன்னாடியே முந்திக்கிறீங்களே?" - ரசிகர்கள் ஜாலி கமெண்ட்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்தில் கிரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
துணிவு படம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவின் கீழ் துணிவு படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கன், "AK & சூரிய அஸ்தமம் இரண்டும் 🔥🔥🔥" என கமெண்ட் செய்தார். அதற்கு ரசிகர் ஒருவர், "எங்களுக்கு முன்னாடியே முந்திக்கிறீங்களே" என ரிப்ளே கமெண்ட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
