‘நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி’!.. இந்த தடவை யார்கிட்ட கேட்டாங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு வலிமை அப்டேட் வாங்கி தருவதாக ரசிகரின் கேள்விக்கு வானதி சீனிவாசன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிட உள்ள தொகுகள் குறித்து அறிவித்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து நேற்று பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 14, 2021
இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டார். இதற்கு, ‘நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என வானதி சீனிவாசன் பதலளித்துள்ளார்.
முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி, தமிழக வீரர் அஸ்வின் உள்ளிட்டோரிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர். அதேபோல் பிரதமர் மோடி தமிழகம் வந்த போதும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் பயணித்த போதும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர். இதனால் அதிர்ப்தியடைந்த நடிகர் அஜித் குமார், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
