'தம்பி அஜீத்குமாருக்கு வாழ்த்துகள்...' 'இளைஞர்களுக்கு ரோல்மாடலா இருக்காரு...' - நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை சொன்ன சீமான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நடிகர் அஜித் குமாரை பாராட்டியத்தோடு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான, முன்னாள் நடிகர் மற்றும் இயக்குனரான சீமான் தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், 'சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் 'சென்னை ரைஃபிள் கிளப்' அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.
இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப திகழும் தம்பி அஜித் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்' என தனது வாழ்த்தையும், இன்றைய இளைஞர்களுக்கு அஜித்குமாரை ஒரு எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
