‘தங்கம் வென்ற தல’!.. ‘அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு ரோல் மாடல்’.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 08, 2021 09:04 AM

தமிழ்நாடு அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Popular director praises Ajith for win Gold medal in rifle competition

தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.

Popular director praises Ajith for win Gold medal in rifle competition

தற்போது ‘வலிமை’ படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அஜித் குமார் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீனியர் பிரிவில் பங்கேற்ற அஜித் குமார், 4 தங்கப்பதக்கம், 2 சில்வர் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Popular director praises Ajith for win Gold medal in rifle competition

இப்போட்டி 3-ம் தேதியிலிருந்து 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 780-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

Popular director praises Ajith for win Gold medal in rifle competition

மேலும் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் நடிகர் அஜித் குமார் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு அவர் தங்கப்பதக்கம் வென்ற செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித் குமாருக்கு, இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் பிரசன்னா, நடிகை குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் அஜித் குமாருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Popular director praises Ajith for win Gold medal in rifle competition | Tamil Nadu News.