‘மொயின் அலி வந்து என்கிட்ட கேட்டார்’!.. சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கேட்ட ‘வலிமை அப்டேட்’.. அஸ்வின் பகிர்ந்த சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 17, 2021 12:10 PM

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டது குறித்து தமிழக வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

Moeen Ali asked me what is Valimai?, says R Ashwin

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்துள்ளார். அப்போது ரசிகர்கள், நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது குறித்து அஸ்வின் தெரிவித்தார்.

Moeen Ali asked me what is Valimai?, says R Ashwin

அதில், ‘தமிழகத்தில் நாம் எவ்வளவு தூரம் சினிமா மீது பைத்தியமாய் இருக்கிறோம் என்பது ஒரு எடுத்துக்காட்டு நிகழ்ந்தது. நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர்  “தல அஸ்வின், அஸ்வின், அஸ்வின்” என்று கூப்பிட்டார். நான்  “என்னப்பா” என்று கேட்டேன். திடீரென்று “வலிமை அப்டேட் எப்படி?” என்றார். என்னய்யா சொல்ற? வலிமையா? எனக்கு ஒன்னுமே புரியல. அப்படியே ஆடிபோயிட்டேன். அப்புறமாக கூகுள் பண்ணி பார்த்தேன். எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல.

Moeen Ali asked me what is Valimai?, says R Ashwin

அடுத்த நாள் மொயின் அலி வந்து, “வாட் இஸ் வலிமை” என்று கேட்டார். அப்போதான் தெரிந்தது மொயின் அலியும் அதே இடத்தில் நிற்கும்போது வலிமை அப்டேட் கேட்டுருக்காங்க. கலக்கிட்டீங்கப்பா நீங்க. மாஸ்டர் படம் கிரேட். ஆனால் இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்டதெல்லாம் அவுட்ஸ்டேண்டிங்’ என அஸ்வின் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Moeen Ali asked me what is Valimai?, says R Ashwin | Sports News.