'வெயிட் பண்ணினது வொர்த் தான்...' மரண மாஸ்...! வெளியானது 'வலிமை' அப்டேட்...! - தெறிக்கவிட்ட 'தல' ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
![valimai update posters, motion poster released Ajith fans excited valimai update posters, motion poster released Ajith fans excited](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/valimai-update-posters-motion-poster-released-ajith-fans-excited.jpg)
பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் தான் வலிமை.
அஜித் படத்தில் நடிக்க கையெழுத்து போட்டத்தில் இருந்து வலிமை பட அப்டேட்க்காக 'தல'யின் ரசிகர்கள் பொறுமையாக காத்து வருகின்றனர்.
வலிமை படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியிருந்தாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நீண்டு கொண்டே வந்தது. படத்தின் பாதியளவிற்கு மேல் முடிந்திருந்தாலும் இதுவரை எந்த வித first look poster, போட்டோ என எதையும் வெளியிடாமல் படக்குழு மௌனம் காத்து வந்தது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள், ட்விட்டரில் வலிமை அப்டேட் என்ற ஹாஸ்டக்கை ட்ரெண்ட் ஆக்கினர். அதோடு கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம், தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள், இன்ஸ்டாவில் லைவ் வரும் பிரபலமானவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் என்று கேட்டு 'தல' ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
ஆனால், படக்குழுவோ எந்தவித அறிவிப்பும் இன்றி தற்போது வலிமை பட மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் காது அதிரும் யுவனின் இசையுடன் POWER IS A STATE OF MIND என அஜித் குமாரின் வலிமை படப் புகைப்படம் வெளிவந்துள்ளது. மேலும் 2021-ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பின் வலிமை படத்தில் தல அஜித் அவர்களின் லுக்கை பார்த்த அவரின் ரசிகர்கள் #ValimaiMotionPoster என்று ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)