"அஜித் என் தம்பி மாதிரி, இப்டி தான் கூப்பிடுவேன்".. போனி கபூர் சுவாரஸ்யம்.. பிரபு பட டைட்டிலை நினைவுகூரும் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11.01.2023 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில், துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், Behindwoods நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் அஜித் குமார் குறித்தும், இயக்குனர் H. வினோத் குறித்தும், துணிவு திரைப்படம் குறித்தும் என பல சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது தவிர, துணிவு படம் ரிலீஸ் ஆகும் அதே 11 ஆம் தேதி, தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது பற்றியும், திரை அரங்குகள் குறித்தும் பல விஷயங்களை போனி கபூர் விளக்கி இருந்தார்.
அதே போல, துணிவு மற்றும் வாரிசு இடையே நம்பர் 1 யார் என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த போனி கபூர், Content தான் நம்பர் 1 என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அஜித் உடனான பந்தம் குறித்து பேசிய போனி கபூர், "நான் அவரை என்னுடைய இளைய சகோதரர் போலவே கருதுகிறேன். சில நேரங்களில் அவரை நான் சின்னத்தம்பி என்று தான் அழைப்பேன்" என குறிப்பிட்டார். நடிகர் அஜித்தை சின்னத்தம்பி என அழைப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ள விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
