“FIRST துணிவு -ல நடிக்க முடியாம போச்சு... எனக்காக கருமாரி அம்மன் கோயிலுக்கு போயி வேண்டினாங்க” - வில்லன் நடிகர் ஜான் கொக்கன் சுவாரஸ்ய தகவல். EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு நடித்த காட்சிகள் ஏன் இல்லை? எடிட்டர் பிரவீன் KL EXCLUSIVE பதில்!
பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் வில்லன் ஜான் கொக்கன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் துணிவு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். "சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு துணிவு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் இன்னொரு வெப் சீரிஸில் நடித்து கொண்டு இருந்ததால் துணிவு படத்தின் வாய்ப்பு முதலில் கை நழுவியது.
அப்போது என் மேனேஜர் கண்ணன் அவர்களின் மனைவி கற்பக வல்லி அக்கா, கருமாரியம்மன் கோயிலுக்கு சென்று சாமிக்கு சேலை அணிவித்து துணிவு படத்தில் மீண்டும் வாய்ப்பு வேண்டும் என வேண்டினார். சரியாக 2 வாரம் கழித்து துணிவு படத்தில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது". என ஜான் கொக்கன் பேசினார்.
Also Read | 'துணிவு' படத்தில் டேவிட் பில்லாவா?.. ஆமா அந்த சீன்ல வந்துச்சுல! வைரலாகும் H. வினோத் Detailing!

மற்ற செய்திகள்
