'துணிவு' படத்தோடு பென் ஸ்டோக்ஸ் ஏலத்தை CONNECT செய்த CSK.. செம TRENDING
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், இன்று (22.12.2022) கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.
Also Read | ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க முயன்ற CSK.. கடைசி நேரத்தில் தட்டி தூக்கிய பிரபல IPL அணி!
முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு சுமார் 20.45 கோடி ரூபாயுடன் சென்னை அணி இறங்கி உள்ளது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராபின் உத்தப்பா, பிராவோ, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட எட்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்திருந்தது.
மறுபக்கம் ருத்துராஜ், ஜடேஜா, மொயீன் அலி உள்ளிட்ட ஏராளமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சிஎஸ்கேவில் பென் ஸ்டோக்ஸ் இணைந்ததையடுத்து மற்றொரு சிஎஸ்கே வீரர் மொயீன் அலி தனது டிவிட்டர் பக்கத்தில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவேற்கிறோம் சாம்பியன" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முகநூல் நூல் பக்கத்தில் பகிர்ந்து, "முன்பு வலிமை அப்டேட், இப்போது துணிவான Buy" என பதிவிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மொயீன் அலியிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.