இங்க 'வலிமை அப்டேட்' இருக்கு மக்களே...! இதையே ஒரு அப்டேட்டா நெனச்சு கண்டிப்பா பண்ணுங்க...' - வைரலாகும் போட்டோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிப்பாக உணர்த்தும் வகையில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது தமிழக திரையிலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும், அனைவராலும் 'தல' என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். தற்போது அஜித்குமார், டைரக்டர் வினோத் குமாரின் வலிமை படத்தில் நடித்து வரும் நிலையில், கூடிய விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
இதற்கு இணையாக இந்த வருடம் நடைபெறவுள்ள 2021ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தல அஜித்தின் வலிமை படத்தை சுட்டிக்காட்டாமல் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படமானது, தல அஜித்தின் ரசிகர்களால் பகிரப்பட்டு இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Here is the #Valimai Update மக்களே 😀 ! #ValimaiUpdate 😎 #TNElections2021 pic.twitter.com/Duwn26Si2G
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) March 9, 2021

மற்ற செய்திகள்
