‘பிள்ளையப்போல வளர்த்தேன்’!.. கதறியழுத கிராமம்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜல்லிக்கட்டு காளை ஒன்று அறுந்து கிடந்த மின்கம்பில் கால் வைத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவரது காளை ‘செவலை’ அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது மாடுபிடி வீரர்களிடம் காளை சிக்காமல் களத்தைவிட்டு வெளியே ஓடி வந்தது. இதனை அடுத்து மாட்டை பிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல அதன் உரிமையாளர் முயற்சி செய்தார்.
ஆனால் யாருக்கும் சிக்காமல் போக்குக் காட்டிய காளை மேலப்பட்டி அருகே உள்ள வயல்வெளிக்குள் நுழைந்தது. அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியில் காளை எதிர்பாராதவிதமாக கால் வைத்தது. இதனால் காளையின் மீது மின்சாரம் தாக்கி தூக்கிவிசப்பட்டது. இதில் படுகாயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதைப் பார்த்த அதன் உரிமையாளர், பிள்ளையைப்போல் வளர்த்த காளை உயிரிழந்துவிட்டதே என கதறி அழுததைப் பார்த்த கிராம மக்களும் கண்ணீர் விட்டு கதறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
