'திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப்'... 'மீட்க நடந்த போராட்டம்'... இளம் பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 03, 2020 09:50 AM

ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், இளம் பெண் அதிகாரி உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Injured in Forest Vehicle Accident, Woman Range Officer Sharmila Dies

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் வினோத் பாண்டியராஜ். இவர் மத்திய கலால்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சர்மிளா. இந்த தம்பதியருக்கு ரையனீஸ் என்ற 4 வயது மகன் இருக்கிறார். சர்மிளா அட்டப்பாடி வனச்சரகத்தில் வன அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே தினமும் வன பகுதியில் ரோந்து செல்லும் வழக்கம் கொண்ட சர்மிளா, தனது பணியை முடித்து கொண்டு முக்காலியில் இருந்து செம்மனூரில் உள்ள அலுவலகத்திற்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். ஜீப்பை உபைது என்பவர் ஓட்டி சென்றார். ஜீப் செம்மனூர் பவானி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தார்கள். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இருவரையும் வெளியே எடுக்க முயற்சி செய்தார்கள்.

டிரைவர் உபைது மீட்கப்பட்ட நிலையில், சர்மிளாவை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு சர்மிளா மீட்கப்பட்டு, மயக்க நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிரைவர் உபைது கடந்த 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தீவிர சிகிச்சையில் இருந்த சர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இளம் அதிகாரி மற்றும் அவரது ஓட்டுநர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரள வனத்துறை அதிகரிகளுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #SHARMILA JAYARAM #FOREST DEPARTMENT #RANGE OFFICER #ATTAPPADI