'போட்டி' தொடங்கிய 27-வது நிமிடத்தில்... கையைத் தூக்கியவாறு 'களத்திலேயே' சரிந்த வீரர்... நொடியில் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 30, 2019 11:46 PM

போட்டியின் நடுவே களத்திலேயே வீரர் ஒருவர் சரிந்து விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Football Player Dhanarajan Collapses during game, dies

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் அகில இந்திய அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றிரவு நடந்த போட்டியில் எஃப்சி பெரிந்தால்மன்னாவும், சாஸ்தா திருச்சூர் அணிகளும் மோதின. போட்டி தொடங்கிய 27-வது நிமிடத்தில், எஃப்சி பெரிந்தால்மன்னா அணியின் வீரரான தனராஜன் (39) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனராஜன் சந்தோஷ் டிராபி போட்டியில் கேரள அணிக்காக விளையாடியவர். இதுதவிர கால்பந்து கிளப்களான மோகன் பகான மற்றும் கிழக்கு வங்காள அணிக்காக விளையாடி ஏராளமான வெற்றிகளையும்  தேடித்தந்தவர். அவரின் திடீர் இறப்பு அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.

 

Tags : #KERALA