‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 04, 2019 06:22 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இஷாந்த் ஷர்மாவுக்கு கோலி அறிவுரை வழங்கி விக்கெட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ishant follows Kohli’s instructions, dismisses Bavuma on the next ball

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 176 ரன்களும், மயங்க் அகர்வால் 215 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை எடுத்துள்ளது.

இப்போட்டியில் அடிக்கடி பவுண்டரிகளை அடித்து இந்திய பவுலர்களை அச்சுறுத்திய தென் ஆப்பிரிக்க வீரர் தெம்பா பவுமாவை கேப்டன் விராட் கோலியும், இஷாந்த் ஷர்மாவும் திட்டம் வகுத்து அவுட் செய்தனர். இஷாந்த் ஷர்மா பந்து வீசுவதற்கு முன் அவரிடம் கேப்டன் விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கினார். இதனை அடுத்து இஷாந்த் ஷர்மா வீசிய அடுத்த பந்தில் தெம்பா பவுமா எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ishant Sharma & Kohli 🔥

A post shared by cricket.heaven.2 (@cricket.heaven.2) on

Tags : #VIRATKOHLI #ISHANTSHARMA #INDVSA #TEAMINDIA #TEST #CRICKET #TEMBABAVUMA