'ஏ.டி.எம் இயந்திரத்திற்கு ஆயுத பூஜை'...'காவலாளி செஞ்ச செயல்'... வாயடைத்துப் போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Oct 08, 2019 11:24 AM
ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையின் போது மக்கள் தங்களின் வாழ்வின் உயர்வுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இடுவது வழக்கம். வீட்டில் உள்ள குழந்தைகளின் சைக்கிள் முதல், பெரியவர்களின் கார் வரை அனைத்திற்கும் பூஜை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது உண்டு.

அந்த வகையில் திருப்பூரில் ஏடிஎம் காவலாளி ஒருவர் ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் - பெருந்துறை சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. இதில் காவலாளியாக பணியாற்றி வந்த ஒருவர், ஆயுத பூஜையை முன்னிட்டு ஏ.டி.எம் மையத்தை தண்ணீர் ஊற்றி கழுவி துடைத்துள்ளார். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் தூசி படிந்து இருக்க அதனையும் சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார்.
இந்நிலையில் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவியதால் ஏ.டி.எம் இயந்திரம் பழுதடைந்து போனது. காவலாளியின் இந்த செயல் வங்கி அதிகாரிகளை வாயடைத்து போக செய்துள்ளது. இதையடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தை பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
