WATCH VIDEO: பந்த காணோமே...ஓடி,ஓடி 'தேடிய' வீரர்கள்..விழுந்து,விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 04, 2019 01:11 PM

கிரிக்கெட் போட்டிகளின்போது சில சுவாரசியமான சம்பவங்களும் நடக்கும்.அது கோபமாக,சிரிப்பாக சில சமயங்களில் வேடிக்கையாகவும் இருக்கும்.அதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியின்போது நடந்துள்ளது.

India vs South Africa: South Africa Fielders Fail To Spot Ball

போட்டியின் 129-வது ஓவரின்போது கேஷவ் மஹாராஜ் வீசிய பந்து ஜடேஜா பேட்,உடலில் படாமல் எல்லைக்கோட்டை நோக்கி சென்றது.பீல்டர்கள் யாராலும் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை.பவுண்டரியை தொட்ட பந்து பவுண்டரியில் இருந்த விளம்பர பலகைகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What a moment 😂 Markram the hero 😂😂

A post shared by cricket.heaven.2 (@cricket.heaven.2) on

ஆனால் இதனை கவனிக்காமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கீழே குனிந்து பந்தை மாங்கு,மாங்கென்று தேடினர்.இதைக்கண்ட கேமராமேன் பந்து இருக்குமிடத்தை கேமரா உதவியுடன் கண்டறிந்து பந்து இருக்குமிடத்தை பெரிய திரையில் காட்டினார்.

 

ஆனால் அப்போதும் வீரர்கள் பந்தை தேடிக்கொண்டு தான் இருந்தனர்.கடைசியில் தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரம் திரையில் பந்தை பார்த்துவிட்டு அசடு வழிய சிரித்துக்கொண்டே ஓடிவந்து எடுத்தார். போட்டியை வர்ணனை செய்த வர்ணனையாளர்கள் பந்து இங்கே இருக்குப்பா என கமெண்ட் செய்ய, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விழுந்து,விழுந்து சிரித்தனர்.