‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 07, 2019 04:15 PM

கவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.

I ended Gautam Gambhirs white ball career claims Mohammad Irfan

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 7 அடி உயரமுள்ள முகமது இர்பான் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் கவுதம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர நான் தான் காரணம் எனக் கூறியுள்ள அவர், கம்பீர் என் முகத்தைப் பார்க்கக் கூட பயப்படுவார் எனக் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் முகமது இர்பான்  பேசும்போது, “2012ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தொடரில் நான் கவுதம் கம்பீரை 4 முறை வீழ்த்தினேன். என்னைப் பார்த்தால் அவருக்கு பயம். வலைப்பயிற்சியின்போது என் முகத்தைப் பார்க்கவே கம்பீர் பயப்படுவார். என்னால்தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன். அந்தத் தொடருக்குப்பின் அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடவில்லை. என்னுடைய உயரம் காரணமாக என்னுடைய பந்தைக் கணிக்க முடியவில்லை என இந்திய வீர்ரகள் என்னிடம் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #GAUTAMGAMBHIR #MOHAMMADIRFAN #CRICKET #CAREER #TEAMINDIA #INIDA #PAKISTAN