'தேவதை வந்தாச்சு'.. மனைவி-மகளுடன்... 'புகைப்படம்' வெளியிட்ட 'பிரபல' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 07, 2019 07:27 PM

இந்திய கிரிக்கெட்டின் 'சின்ன' ராகுல் டிராவிட் என அழைக்கப்படும் வீரர் அஜிங்கியா ரஹானே. ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக இவர் விளையாடி வருகிறார். தற்போது இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார்.

 

Ajinkya Rahane shares her Daughter Picture on Twitter

இவருக்கு கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது மனைவி-மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரஹானே வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரஹானேவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.