‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 04, 2019 02:40 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன், ஜடேஜா சைகையில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Virat Kohli and Jadeja communicate using hand gestures on field

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 215 ரன்களும் ரோஹித் ஷர்மா 176 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் நடுவே பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜா, கேப்டன் விராட் கோலியிடம் பேட்டிங்  செய்வது குறித்து சைகையில் கேள்வி கேட்டார். அதற்கு விராட் கோலி 9 ஓவர்களை வரை பேட்டிங் செய்ய வேண்டும் என பதிலளித்தார். இருவரும் சைகையில் பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Alpha to Delta 🗣️🗣️ Jadeja to dressing room 🚨🚨 Try & Decode this if you can #TeamIndia #INDvSA @paytm

A post shared by Team India (@indiancricketteam) on

Tags : #VIRATKOHLI #RAVINDRA JADEJA #BCCI #TEAMINDIA #INDVSA #TEST #CRICKET #HANDGESTURES