WATCH VIDEO: ரன் எடுக்க 'வர' மாட்டியா?.. சக வீரரை 'கெட்ட' வார்த்தையால் 'திட்டிய' ஹிட்மேன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 05, 2019 07:41 PM
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 431 ரன்கள் குவித்தது.இதன் மூலம் இந்தியா 71 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் விரைவாக 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார்.எனினும் விரைவாக ரன் சேர்க்காமல் புஜாரா தொடர்ந்து கட்டை போட்டார்.61 ரன்களில் புஜாரா வெறும் 8 ரன்களே எடுத்ததால் ரோஹித் சற்றே வெறுப்படைந்து விட்டார்.
Rohit sharma - "Puji Bhaag BC" 🤣#INDvsSA #RohitSharma pic.twitter.com/hpUCHo3pWo
— Nitin 🇮🇳 (@viratfanalways) October 5, 2019
இதன் எதிரொலி 26-வது ஓவரின் 2-வது பந்தில் தெரியவந்தது.2-வது பந்தை எதிர்கொண்ட ரோஹித் பந்தை அடித்துவிட்டு புஜாரா ரன் எடுக்க ஓடி வர வேண்டும் என எதிர்பார்த்தார்.ஆனால் புஜாரா ஓடி வரவில்லை. அதைக் கண்டு கடுப்பான ரோஹித் சர்மா, புஜாராவை பார்த்து, "புஜி ஓடி வா,'' என சொல்லி ஒரு கெட்ட வார்த்தையையும் சேர்த்து கூறினார். ரோஹித் சர்மா கூறிய கெட்ட வார்த்தை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பெயரை உச்சரிப்பது போன்ற ஒரு வார்த்தை.
This time it’s Rohit not Virat....if you know you know 😂
— Ben Stokes (@benstokes38) October 5, 2019
இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஏனெனில் எப்போதும் விராட் தான் களத்தில் கெட்ட வார்த்தை பேசுவார்.தற்போது ரோஹித்தும் பதட்டத்தில் கெட்ட வார்த்தை பேசிவிட்டார்.இது களத்தில் இருந்த மைக்கில் பதிவாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ''இந்த முறை எனது பெயரை சொன்னது விராட் அல்ல,ரோஹித்,'' என்று கலாய்த்துள்ளார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
