'இதுலயாவது ஒண்ணு சேருவோம்'... 'விஷம் குடித்த காதலன்'...'கடைசியில் 'ட்விஸ்ட்' கொடுத்த காதலி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 20, 2019 11:54 AM

காதலியுடன் தற்கொலை செய்ய நினைத்த காதலன், இறுதியில் காதலி அவரை விட்டு செல்ல, காதலன் மட்டும் தற்கொலை செய்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young man trying to suicide with his girlfriend finally she escaped

போடி அருகே கோம்பையைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. மைனரான அந்த சிறுமியுடன் கடந்த மே 2 ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய விஜய், சிறுமியை திருமணம் செய்ய அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் தங்களது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

இதையடுத்து சிறுமியை கடத்திச் சென்றதாக விஜய் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 3 மாத சிறைவாசத்திற்கு பின்னர், கடந்த 14 ந்தேதி நிபந்தனை ஜாமீனில் விஜய் வெளியில் வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை சந்தித்த விஜய், சேர்ந்து வாழ தான் முடியவில்லை, மரணத்திலாவது ஒண்ணு சேரலாம் என கூறி, தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு விஜய், தனது காதலியை வைகை அணைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைகை அணை மதகுப் பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்ற விஜய், சிறுமியிடம் விஷத்தை குடிக்க கூறியுள்ளார். ஆனால் விஷத்தை குடிக்க மறுத்த சிறுமி, தொடர்ந்து தற்கொலை செய்வதில் விருப்பமில்லை என்று தயங்கியபடியே நின்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில் விஷத்தை படக்கென்று குடித்த விஜய், அந்த சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அணையில் குதிக்க தயாராகி உள்ளார். ஆனால் உஷாரான அச்சிறுமி கையை சரியாக பிடிகொடுக்காமல் இருந்துள்ளார். ஒன்றாக குதிக்கும் எண்ணத்தில் விஜய் அணையில் இருந்து கீழே குதிக்க, அந்த பெண்ணோ கையை உருவிக்கொண்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்நிலையம் சென்ற அந்த சிறுமி தனது காதலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் விஜயை தேட தொடங்கினர்.இரவு வெகுநேரம் ஆகியும் விஜயின் சடலம் கிடைக்காத நிலையில், திங்கள் கிழமை 2 வது நாளாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். மாலை வரை தேடியும் விஜயின் சடலம் சிக்கவில்லை. இந்த நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜய் சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ''சாகும் போதும் தனது காதலி உடன் வருவாள் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய், கடைசி நேரத்தில் தன்னை காதலி கைவிட்டதால் உயிர்பிழைக்க விரும்பியுள்ளார். அரைகுறை மயக்கத்துடன் அணை நீரில் நீச்சல் அடித்து எதிர்கரைக்கு சென்று அங்கு மீன் பிடிக்க வந்த இளைஞர்களிடம்  தான் காதலிக்காக விஷம் குடித்த தகவலை சொல்லி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது இரக்கப்பட்ட இளைஞர்கள் விஜய்யை மீட்டு மோட்டார் சைக்கிளில் வைத்து தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விஜய் குடித்த பூச்சி மருந்து வீரியம் குறைந்தது என்பதால் அவரது உயிருக்கு உடனடியாக ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பதின் பருவ பெண்ணுடன் காதல் வயப்பட்டு, அவருடன் சக முயற்சித்து இறுதியில் உயிர் பிழைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #THENI #BOY FRIEND #VAIGAI DAM