'கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்று'... 'கணவர் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 19, 2019 06:47 PM

குடும்பத் தகராறில் கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர், போலீசுக்கு  பயந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband killed wife and attempt suicide in kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். 28 வயதான இவருக்கும்,  சண்முகப்பிரியா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாததால்,கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல், திங்கள்கிழமையன்று  இரவிலும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கர்ப்பிணி என்றும் பாராமல், தனது மனைவியான சண்முகப்பிரியாவை கழுத்தை அறுத்ததுடன், கைகளில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார். மேலும் போலீசாருக்கு பயந்து போன மாரியப்பன், தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் அவர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் செவ்வாயன்று காலை வெகுநேரம் ஆகியும் மாரியப்பன் வீட்டுக்கதவு திறக்கப்படாததால், அவரது அக்காவான காளியம்மாள் தனது தம்பியை தேடி அங்கு வந்தார். வீட்டுக்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறியதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #TUTICORIN