‘காதலால் சிறுமியைக் கடத்திய இளைஞர்..’ தேடிப் போய் கொடூரமாகக் கொன்ற கும்பல்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 12, 2019 05:25 PM
தஞ்சாவூரில் சிறுமியைக் காதலித்து கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் இலுப்பக்கோரையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை மணலூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அந்த சிறுமியை கடந்த 8ஆம் தேதி கடத்திவிட்டதாக சிறுமியின் தந்தை அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணையில் அந்த சிறுமியை பிரசாந்த் தனது சித்தப்பா வீட்டில் வைத்திருந்ததாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற சிறுமியின் உறவினர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்ணாறு கரையோரம் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். துணியால் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்த அவருக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்த போலீஸார் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் உறவினர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
