'6 வயது குழந்தையை கொன்றுப் புதைத்து நாடகமாடிய தாய்'... பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 18, 2019 12:20 PM

இரண்டாவது கணவருடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தாய் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 year old boy murder by her mother and step father near vellore

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவ்யா. இந்த தம்பதிக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதிலான குழந்தை இருந்தது. கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, காவ்யா கணவரை பிரிந்து குழந்தையுடன் ராணிப்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், காவ்யாவுக்கு, தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், இவர்கள் திருமணம் செய்து கொண்டு, குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் 13-ந்தேதி மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தருணை, அண்டாவில் உள்ள தண்ணீருக்குள் மூழ்கடித்து, தாய் மற்றும் அவரது 2-வது கணவர் கொலை செய்தனர். பின்னர் மூட்டையில் கட்டப்பட்ட குழந்தையை, பைக்கில் எடுத்து சென்று பாலாற்றில் குழந்தையை புதைத்துள்ளனர். 

பின்னர் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர். இந்நிலையில் காவ்யாவின் தாய்க்கு இந்த சம்பவம் தெரிந்ததையடுத்து, தென்கடப்பந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அதியமானுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், ஆற்காடு வட்டாட்சியர் வத்தட்சலா முன்னிலையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDER #CHILD