'அண்ணே நான் உன்னோட தங்கச்சி' ... 'அண்ணனின் வெறிச் செயல்'... அதிர வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 15, 2019 02:08 PM

பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், தனது சகோதரராலேயே கத்தியால் குத்தி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Brother killed his sister in Trichy

திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மலர்விழி.இவர் வழக்கம் போல கல்லூரி முடிந்து வீடு திரும்பியுள்ளார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் வந்த போது, அவரது பெரியப்பா மகன் முரளி திடீரென வழிமறித்ததாக கூறப்படுகிறது.அண்ணன் தானே என நினைத்து அவரிடம் பேச முற்பட்ட போது,தான் வைத்திருந்த கத்தியால், மலர்விழியை  சரமாரியாக குத்தியுள்ளார் முரளி.இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.

இதனிடையே, மலர்விழியை கத்தியால் குத்திய முரளியை சூழ்ந்து கொண்ட மக்கள், அவரைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற முரளி திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDER #BROTHER #KILLED #SISTER #TRICHY