'தாயும், ஒன்றரை வயது குழந்தையும் கொடூரக் கொலை'... 'நெஞ்சை' பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 10, 2019 03:19 PM

நாமக்கல் அருகே தாய் மற்றும் ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mother and son brutally murder in namakkal erumapatti village

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். லாரி ஓட்டுநரான இவர், கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த கெளரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தான். சுரேசும், கெளரியும் சமீப நாட்களாக வீட்டில் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிறன்று மாலை, சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து, அவர்களை உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். அதில், சுரேஷ் மட்டும் கழுத்தறுத்தப்படி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, கெளரியும், புகழ்வின்னும் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

சுரேஷை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எருமப்பட்டி போலீசார், அந்த இடத்தில் இருந்து கத்தி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். மர்மநபர்கள் யாராவது கொலை செய்திருக்கக் கூடுமா என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. 

பின்னர் மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால், மனைவியையும் குழந்தையையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று சுரேஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் எழுப்பி உள்ளனர். தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு தனது கழுத்தையும் அவர் அறுத்திருக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #NAMAKKAL