‘சூப்பர் தல, கரெக்ட்டா சொன்னீங்க’.. தோனியின் ஓய்வு குறித்து நச்னு பதிலளித்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 19, 2019 06:42 PM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெக்ரத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 12 -வது உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் அதிக ஒருநாள்(341) போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். ஆனால் அப்போட்டியில் தோனி 1 ரன்னில் அவுட்டானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ரத்திடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மெக்ரத், ‘தோனி ஓய்வு பெறுவது தொடர்பாக எங்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தோனி ஓய்வு பெற விரும்பும் வரை அவர் விளையாட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
