'2 நாள்தான் பாக்கல'.. ஆனாலும் 'இனம்.. நிறம்' கடந்த அன்பைப் பரிமாறி.. நெகிழ்ந்த 'லிட்டில்' நண்பர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 11, 2019 08:15 PM
அமெரிக்காவில் ஓரிரு நாட்கள் மட்டுமே பிரிந்திருந்தாலும், மீண்டும் சந்தித்தபோது தீராத பாசத்தால், ஆரக்கட்டித் தழுவிக் கொண்ட இரு குழந்தைகளின் செயல் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் மேக்ஸ்வெல் மற்றும் ஃபின்னகன் என்கிற இரண்டு குழந்தைகளும் ஒன்றாக உண்டு, உடுத்தி, திண்பண்டம், பொம்மைகள் என எதுவாயிருந்தாலும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஓரிரு நாள் பிரிந்தாலும் இருவரும் தங்கள் பிரிவை அனுசரித்து, அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.
அப்படி இவர்கள் இருவரும் தத்தம் தந்தைகளுடன் அவரவர் வீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தபோது எதார்த்தமாக சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது இருவரும் உற்சாக மிகுதியில் ஓடி ஒருவருக்கொருவர் தங்கள் பாசப் பிணைப்பை, கட்டிக்கொண்டு பரிமாறிக் கொண்டனர்.
இதில் பியூட்டி என்னவென்றால், இவர்களின் இருவரின் முந்தைய சந்திப்பு நிகழ்ந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், ‘அந்த நாள் நியாபகம்.. நெஞ்சிலே வந்ததே.. நண்பனே .. நண்பனே’ ரேஞ்சுக்கு தங்கள் பிரிவை நினைத்து வாடி, நேரில் சந்தித்துக்கொண்டதன் தருணத்தை அன்பால் ஒருவரைஒருவர் கட்டித் தழுவி நெகிழ்ந்துள்ளனர்.
இனம், நிறம் இன்ன பிற வேற்றுமைகளைக் கடந்து அன்பு செலுத்திக்கொண்ட இந்த குழந்தைகளின் செயலை , மேக்ஸ்வெல்லின் தந்தை இணையத்தில் பகிர்ந்ததன் பிறகு, இந்த குழந்தைகள் வைரலாகியுள்ளனர்.