‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 15, 2019 12:21 PM

தாம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Chennai Tambaram 2 Youngsters Died In School Bus Bike Accident

சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பிரசாந்த் (20), பள்ளி மாணவர்களான  தினேஷ் (18), ஜெகநாதன் (18) ஆகியோர் நேற்று மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர். அவர்கள் தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தபோது அவர்கள் தடுமாறி கீழே விழ, நொடிப்பொழுதில் பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து அவர்கள் மீது ஏறியுள்ளது.

இந்த கோர விபத்தில் பிரசாந்த், தினேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த ஜெகநாதனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பள்ளிப் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #COLLEGESTUDENT #SCHOOLSTUDENT #CHENNAI #TAMBARAM